உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிக்கு தேர்தல் அலுவலர், உதவி அலுவலர் யார்?

மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிக்கு தேர்தல் அலுவலர், உதவி அலுவலர் யார்?

சேலம்: தமிழகத்தில், 2026ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கு, 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி சேலம் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விபரம் வருமாறு:

சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 1. கெங்கவல்லி(எஸ்.சி.,) - மோகனசுந்தரம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், சேலம் - தாசில்தார்கள் நாகலட்சுமி(கெங்கவல்லி), பாலாஜி(தலைவாசல்)2. ஆத்துார்(எஸ்.சி.,) - தமிழ்மணி, ஆர்.டி.ஓ., ஆத்துார் - தாசில்தார்கள் பாலாஜி(ஆத்துார்), ஜெயக்குமார்(பெத்தநாயக்கன்பாளையம்) 3. ஏற்காடு(எஸ்.டி.,) - ராஜசேகரன், தனி துணை கலெக்டர், முத்திரை கட்டணம், சேலம் - தாசில்தார்கள் ஜெயந்தி(வாழப்பாடி), செல்வராஜ்(ஏற்காடு) 4. ஓமலுார் - மயில், துணை கலெக்டர், நில நிர்வாகம், சேலம் - தாசில்தார்கள் ரவிக்குமார்(ஓமலுார்), நாகூர்மீரான்(காடையாம்பட்டி)5. மேட்டூர் - சுகுமார், ஆர்.டி.ஓ., மேட்டூர் - தாசில்தார்கள் ரமேஷ், செந்தில்குமார்(சமூக பாதுகாப்பு திட்டம்), மேட்டூர்.6. இடைப்பாடி - நடராஜன், உதவி கமிஷனர்(கலால்), சேலம் - தாசில்தார்கள் வைத்தியலிங்கம், ராஜமாணிக்கம்(சமூக பாதுகாப்பு திட்டம்), இடைப்பாடி.7. சங்ககிரி - கேந்திரியா, ஆர்.டி.ஓ., சங்ககிரி - தாசில்தார்கள் வாசுகி, அருள்குமார்(சமூக பாதுகாப்பு திட்டம்) சங்ககிரி.8. சேலம் மேற்கு - ஜானகி, தனி துணை கலெக்டர்(சமூக பாதுகாப்பு திட்டம்), சேலம் - ஏகராஜ் (சூரமங்கலம் உதவி கமிஷனர்), மனோகரன்(மேற்கு தாசில்தார்)9. சேலம் வடக்கு - நவீன்தரன், துணை கமிஷனர், மாநகராட்சி, சேலம் - லட்சுமி(அஸ்தம்பட்டி உதவி கமிஷனர்), பார்த்தசாரதி(தாசில்தார், சேலம்)10. சேலம் தெற்கு - இளங்கோவன், கமிஷனர், சேலம் மாகநராட்சி -தமிழ்வேந்தன்(கொண்டலாம்பட்டி உதவி கமிஷனர்), செந்தில்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், சேலம்.11. வீரபாண்டி - உதயகுமார், ஆர்.டி.ஓ., சேலம் - தாசில்தார்கள் ஸ்ரீதர், விமல்பிரகாஷ்(சமூக பாதுகாப்பு திட்டம்), தெற்கு, சேலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ