| ADDED : டிச 07, 2025 08:37 AM
மேட்டூர்: மேட்டூர் அணை வலதுகரைக்கு செல்ல வசதி-யாக, ரவுண்டானா அமைக்கும் பணி தொடங்கப்-பட்டுள்ளது.மேட்டூரில் இருந்து கொளத்துார், தமிழக எல்-லையில் உள்ள பாலாறு, கர்நாடகா மாநிலம் மாதேஸ்வரன்மலை, கொள்ளேகால் வழியே, மைசூரு, 180 கி.மீ.,ல் உள்ளது. அதில் மேட்டூர் -கொளத்துார் சாலை, 10 கி.மீ.,க்கு, 7 மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது. அதில் மேட்டூர் மின் பணிமனை பிரிவில் இருந்து சென்றாய பெருமாள் கோவில் வரை, 7 கி.மீ., சாலை இருபுறமும், 3 மீ., அகலப்படுத்தும் பணியை, மேட்டூர் உபகோட்ட நெடுஞ்சாலைத்-துறை சார்பில், 10 கோடி ரூபாய் மதிப்பில், 3 ஒப்-பந்ததாரர்கள் மேற்கொண்டுள்ளனர்.அதில் மேட்டூர் அணை வலதுகரை பகுதிக்கு, மேட்டூர் - கொளத்துார் நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும். இதனால் அப்-பகுதியில் வாகனங்கள் செல்ல வசதியாக ரவுண்-டானா அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இப்பணிகள் வரும் மார்ச்சில் நிறைவடையும் என, நெடுஞ்சாலைத்துறை மேட்டூர் உபகோட்ட பொறியா-ளர்கள் தெரிவித்தனர்.