மேலும் செய்திகள்
அரசு பஸ்சை விரட்டிய தனியார் பஸ்; பயந்து ஓடிய மாணவர்கள்
5 minutes ago
கும்பாபிஷேகம்
22 hour(s) ago
மாட்டு வண்டி பந்தயம்
22 hour(s) ago
காரைக்குடி நபரிடம் ரூ.93 ஆயிரம் மோசடி
22 hour(s) ago
சிவகங்கை: சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர், ஊழியர் பணப்பலன் திரும்ப வழங்காதது குறித்து 2 ம் கட்ட விசாரணையை டிச., 2 வது வாரத்தில் கூட்டுறவு துறை கூடுதல் பதிவாளர் முத்துக்குமாரசுவாமி மேற்கொள்ள உள்ளார். சிவகங்கையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் உள்ள கிளை வங்கிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலர், ஊழியர்களின் பணபலன் ரூ.6.33 கோடி வரை வழங்கப்படாமல் இழுத்தடிப்பதாக ஓய்வூதியர்கள் கூட்டுறவு பதிவாளருக்கு புகார் அளித்தனர். அதே போன்று ஓய்வூதியர் பணத்தில் இருந்து மற்றவர்களின் பெயரில் உள்ள கடன் தொகையை ரூ.48 லட்சம் வரை பிடித்தம் செய்ததாக புகார் எழுந்தது. இவ்விரு புகார் குறித்தும் நவ., 28 ம் தேதி கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர் முத்துக்குமார சுவாமி விசாரணையில் ஈடுபட்டார். விசாரணையின் போது, ஓய்வூதியர் பணபலன்கள் ரூ.6.33 கோடியில் ரூ.4 கோடி வரை திரும்ப செலுத்தி விட்டதாக வங்கி சார்பில் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இன்னும் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், டிச., 2 வாரத்தில் இரண்டாம் கட்ட விசாரணையை கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர் மேற்கொள்வார். இந்த விசாரணைக்கு பின்னரே இடைக்கால அறிக்கை தயார் செய்து கூட்டுறவு துறை செயலர், பதிவாளரிடம் வழங்குவார் என தெரிவிக்கின்றனர்.
5 minutes ago
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago