உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  விபத்து நடந்த இடத்தில் டி.ஐ.ஜி., ஆய்வு

 விபத்து நடந்த இடத்தில் டி.ஐ.ஜி., ஆய்வு

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே காரைக்குடி ரோட்டில் சமத்துவபுரம் அருகில் அரசு பஸ்கள் மோதலில் 11 பேர் இறந்தனர். விபத்து நடந்த இடத்தை ராமநாதபுரம் டி.ஐ.ஜி. மூர்த்தி ஆய்வு செய்தார். திருப்புத்துார் அருகே நேற்று முன்தினம் மாலை இரு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதலில் 11 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். விபத்து குறித்து சிராவயல்புதூர் வி.ஏ.ஓ., வினோத் குமார் கொடுத்த புகாரில் நாச்சியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காரைக்குடியில் இருந்து திண்டுக்கல்லுக்கு சென்ற அரசு பஸ் டிரைவர் சுதாகர் மீது அஜாக்கிரதையாக, அபாயகரமாக வாகனம் ஓட்டி இறப்பு ஏற்படுத்தியதாக 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நாச்சியாபுரம் போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைவர் சுதாகர் தற்காலிக பணியாளராக பணியாற்றுபவர். விபத்தில் கால் மற்றும் கை களில் முறிவு ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் நேற்று காலை 11:00 மணி அளவில் விபத்து நடந்த இடத்தை டி.ஐ.ஜி.மூர்த்தி பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை