உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பழிக்குப்பழியாக முதியவர் கொலை; போலீசில் 2 பேர் சரணடைந்தனர்

பழிக்குப்பழியாக முதியவர் கொலை; போலீசில் 2 பேர் சரணடைந்தனர்

சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திருவேகம்புத்துாரில் பழிக்கு பழியாக ஆடு மேய்த்து கொண்டிருந்த முதியவர் கருப்பையாவை 60, கொலை செய்யவில்லை எனக்கூறி இருவர் நேற்று போலீசில் சரணடைந்தனர். சிவகங்கை அருகே சாமியார்பட்டியைச் சேர்ந்த தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் பிரவீன் குமார் 27. இவர் ஏப்., 27 மதியம் தோட்டத்தில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த கருப்பையா மகன் விக்கி என்ற கருணாகரன் 20, சிவகங்கை காளவாசல் பிரபாகரன் 19, திருப்பத்துார் நரசிங்கபுரம் குரு 21, செய்களத்துார் முகேஷ் 21, கொலை செய்ய ஆயுதங்கள் வழங்கிய 14 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதனால் சாமியார்பட்டியிலிருந்து வெளியேறிய விக்கியின் தந்தை கருப்பையா, மனைவி விமலாவுடன் 42, தேவகோட்டை அருகே திருவேகம்பத்துார் விலாங்காட்டூர் பகுதியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த கருப்பையாவை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. விமலா திருவேகம்பத்துார் போலீசில் சாமியார்பட்டியைச் சேர்ந்த பாக்கியநாதன் மகன் இளையராஜா உள்ளிட்ட 3 பேர் கணவரை வெட்டி கொலை செய்ததாக புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று மதியம் 3:00 மணிக்கு சாமியார்பட்டியைச் சேர்ந்த இளையராஜா 41, தங்கராஜூ மகன் மகாராஜா 34, ஆகியோர் சிவகங்கை நகர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் முன்னிலையில் சரணடைந்தனர். கொலைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. நாங்கள் வெளியூரில் இருந்தோம். எங்கள் பெயர் அடிபடுவதால் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தோம் என்றனர். அவர்களை போலீசார் திருவேகம்புத்துார் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை