உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  தென்னை மரங்களுக்கு காப்பீடு விவசாயிகள் வலியுறுத்தல்

 தென்னை மரங்களுக்கு காப்பீடு விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்புவனம்: தமிழகத்தில் தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்து தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மடப்புரம், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே வெள்ளை ஈ தாக்குதலால் தென்னை மரங்களில் காய்ப்பு திறன் குறைந்து விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். திருப்புவனம் அருகே லாடனேந்தலில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வெள்ளை ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும், தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், கொப்பரை தேங்காய்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வீரபாண்டி, ஜெயராமன், கேசவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ