உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  மிளகனுாரில் உரம் வாங்க காத்திருந்த விவசாயிகள்

 மிளகனுாரில் உரம் வாங்க காத்திருந்த விவசாயிகள்

மானாமதுரை: மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் நெல் விவசாயம் செய்யும் விவசாயிகள் மிளகனுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உரம் வழங்கக்கோரி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மானாமதுரை தாலுகாவில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது நெற்பயிர்களுக்கு உரமிடும் பருவத்தில் சிவகங்கை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் உரம் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். மிளகனுார் சுற்றுவட்டார பகுதிகளிலும் உரம் கிடைக்காமல் சிரமப்படும் விவசாயிகள் நேற்று மிளகனுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 500க்கும் மேற்பட்ட உர மூடைகள் இருப்பதாக தகவல் தெரிந்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்திற்கு முன்பாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சங்க ஊழியர்கள் அனைவருக்கும் சமமாக சப்ளை செய்வதற்கு போதுமான உர மூடை இல்லாததால் இன்னும் சில நாட்களில் போதுமான அளவிற்கு உர மூடைகள் வந்த பிறகு அனைத்து விவசாயிகளுக்கும் சப்ளை செய்யப்படும் என கூறிய போது விவசாயிகள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ