உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பாசன கால்வாயில் தேங்கிய கழிவுநீர் மழைநீர் வீணாவதால் விவசாயிகள் கவலை

 பாசன கால்வாயில் தேங்கிய கழிவுநீர் மழைநீர் வீணாவதால் விவசாயிகள் கவலை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பாசன கால்வாய் அடைப்பால் கழிவுநீர் தேங்கி மழைநீர் கண்மாய்க்கு செல்லாமல் வீணாகிறது. அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட உப்பாறு அணைக்கட்டில் இருந்து அரசினம்பட்டி வழியாக பல்வேறு கிராமங்களுக்கு தண்ணீர் செல்ல வன்னிமகுந்தான் கால்வாய் உள்ளது. குப்பை கொட்டப்பட்டும், ஆக்கிரமிப்பு காரணமாகவும் இக்கால்வாய் இருந்த இடமே தெரியாமல் உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து பெயரளவுக்கு சில மீட்டர் தூரம் மட்டும் கால்வாய் துார்வாரப்பட்டது. அரசினம்பட்டி அருகே கால்வாய் முழுவதும் மூடப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் கால்வாயில் கழிவு நீர், குப்பை தேங்கி சாக்கடையாக மாறியுள்ளது. மழை பெய்யும் போது தண்ணீர் பாசன கண்மாய்களுக்கு செல்ல முடியாமல் இடையிலேயே வீணாகி விடுகிறது. மழை பெய்தும் தேங்கிய கழிவுநீர் கூட தங்கள் கண்மாய்களுக்கு வந்து சேரவில்லையே என ஆயக்கட்டுதாரர்கள் கவலையில் உள்ளனர். கால்வாயை முழுமையாக சீரமைத்து அனைத்து கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்ல மாவட்ட நிர்வாகம் வழி ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை