உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  மாற்றுத்திறனாளி அலுவலக வாகன கண்ணாடி உடைப்பு: ஒருவர் கைது

 மாற்றுத்திறனாளி அலுவலக வாகன கண்ணாடி உடைப்பு: ஒருவர் கைது

சிவகங்கை: சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு குடியிருப்பில் குடியிருந்து வருபவர் செல்லம் 55. இவர் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலக உதவியாளராக பணிபுரிகிறார். இவரது மகன் அஜித்குமார் 29. செல்லம் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார். அப்போது அஜித்குமார் தனக்கு உடல்நிலை சரியில்லை என போதையில் போனில் பேசியுள்ளார். அதற்கு செல்லம் பணியின் போது வரமுடியாது என்று கூறியுள்ளார். மீண்டும் அஜித்குமார் போனில் பேசியுள்ளார். செல்லம் அவரது வீட்டிற்கு மகனை பார்க்க சென்றார். வீட்டில் மகன் இல்லாததால் மீண்டும் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அஜித்குமார் நான் அழைத்தும் நீ வராததால் ஆத்திரத்தில் உனது அலுவலக வாகன கண்ணாடியை உடைத்தேன் என்று அசிங்கமாக பேசியுள்ளார். செல்லம் நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அஜித்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை