உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  வாகனங்கள் செல்ல முடியாத சேம்பார் ரோடு

 வாகனங்கள் செல்ல முடியாத சேம்பார் ரோடு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சேம்பார் செல்லும் ரோடு முழுவதும் சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது சேம்பார் கிராமம். இந்த கிராமத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட பள்ளி கல்லுாரி மாணவர்கள் சிவகங்கையில் படித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு சிவகங்கையில் இருந்து சாத்தரசன்கோட்டை, சிரமம், மணக்குடி வழியாக அரசு பஸ் தினசரி காலை 6:15 மணிக்கு புறப்பட்டு சேம்பாருக்கு 7:20 சென்றடையும். மீண்டும் 8:10 மணிக்கு சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் வரும். இதே போல் மாலையில் 5:00 மணிக்கு சிவகங்கையில் புறப்பட்டு சேம்பார் சென்று மீண்டும் சிவகங்கை வரும். இந்த பஸ் சேதம் அடைந்த ரோட்டில் சிரமத்தில் இருந்து சேம்பாருக்கு 5 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். மழைக் காலத்தில் சேம்பார் செல்லாமல் பஸ் சிரமத்தோடு திரும்பும் சூழல் உள்ளது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட இந்த ரோட்டில் வேகமாக செல்ல முடியாது சூழல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த இந்த ரோட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ