மேலும் செய்திகள்
அரசு பஸ்சை விரட்டிய தனியார் பஸ்; பயந்து ஓடிய மாணவர்கள்
42 minutes ago
கும்பாபிஷேகம்
23 hour(s) ago
மாட்டு வண்டி பந்தயம்
23 hour(s) ago
திருப்புவனம் : சிவகங்கை மாவட்டத்தில் பலரும் கார்களில் நீலம், சிவப்பு விளக்கு பொருத்தி பயன்படுத்துவதால் பொதுமக்கள் குழப்பமடைகின்றனர். அத்யாவசிய பணிகளில் உள்ள வாகனங்கள் விரைவாக செல்ல வாகனங்களில் நீலம் மற்றும் சிவப்பு நிற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. போலீஸ் உயரதிகாரிகள், ஆம்புலன்ஸ், வி.ஐ.பி.,வாகனங்கள் உள்ளிட்டவற்றில் நீலம், சிவப்பு நிற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வகை விளக்குகள் பொருத்த உரிய வழிகாட்டு முறைகளை நீதிமன்றங்கள் வெளியிட்டுள்ளன. தகுதியற்ற நபர்கள் வாகனங்களில் இந்த விளக்குகளை பயன்படுத்த முடியாது. சமீப காலமாக அரசியல்வாதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலரும் வாகனங்களில் ஸ்ட்ரோப் விளக்குகளை பொருத்தி வலம் வருகின்றனர். போக்குவரத்து மிகுந்த சாலைகளில் ஸ்ட்ரோக் விளக்குகளை ஒளிர விட்டபடியே வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பதறி விலகுகின்றனர். இதனால் விபத்துகளும் ஏற்படுகின்றன. இது போன்ற விளக்குகளுடன் வலம் வரும் வாகனங்கள் மீது போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. குறிப்பாக திருப்புவனத்தில் ஆளும் கட்சியினர் பலரும் ஸ்ட்ரோக் விளக்குகளை பொருத்தி வலம் வருகின்றனர். மாவட்ட போலீசார் ஸ்ட்ரோக் விளக்குகள் பொருத்திய வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
42 minutes ago
23 hour(s) ago
23 hour(s) ago