உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / பெயரில் மட்டுமா தங்கம்; உள்ளமும் தான் தங்கம்!

பெயரில் மட்டுமா தங்கம்; உள்ளமும் தான் தங்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தென்காசி: புளியங்குடியில் ரோட்டில் கிடந்த பையில் இருந்த ரூ 5 லட்சத்தை விவசாய தம்பதி, உரியவரிடம் ஒப்படைத்ததை போலீசார் பாராட்டினர். தென்காசி மாவட்டம் புளியங்குடி புதுக்குடியை சேர்ந்தவர் தங்கசாமி 50. விவசாயி. மனைவி ஜோதி. இருவரும் விவசாய பணிக்கு செல்லும் போது ரோட்டில் ஒரு மஞ்சள் துணிப்பை கிடந்தது. அதில் ரூ 5 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. பையை எடுத்துப் பார்த்த தங்கசாமி அங்கிருந்தவர்களிடம் யாராவது தொலைத்து விட்டார்களா என விசாரித்தார். யாருமே உரிமை கொண்டாடாததால் புளியங்குடி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தரிடம் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் புளியங்குடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன் 44, என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அவர் அடகு நகைகளை மீட்க டூவீலரில் சென்றபோது தவற விட்டிருந்தார். எனவே போலீசார் பாலமுருகனை அழைத்து தங்கசாமி கையினாலேயே அதை ஒப்படைத்தனர். தங்கசாமி, ஜோதி தம்பதியை தென்காசி எஸ்.பி அரவிந்த் மற்றும் இன்ஸ்பெக்டர் ஷ்யாம் சுந்தர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

vijai hindu
பிப் 28, 2025 11:40

இந்த மாதிரி மக்கள் இருந்தா திமுக போன்ற கட்சிகளுக்கு ஓட்டு போட மாட்டார்கள்


saravan
பிப் 28, 2025 08:26

போலீஸ்காரங்க, பணத்தை அமுக்காமல், அதை உரியவர்களை கண்டுபிடித்து கொடுத்தார்களே, அது அதைவிட பெரிது...


பல்லவி
பிப் 28, 2025 01:46

தங்களின் செயலுக்கு உன்னதமான பலன் கிடைக்கும் பாராட்டுதல்கள்


ES
பிப் 27, 2025 22:50

Best news i have read in a long time. Great people with heart of gold


Senthil Arun Kumar D
பிப் 27, 2025 22:22

எடுத்தவர் உரியவரிடம் திருப்பி கொடுத்தது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. கணவன் மனைவி இருவருக்கும் பாராட்டுக்கள். பணத்தின் உரிமையாளர் எப்படி இவ்வளவு அஜாக்கிரதையாக அதை கொண்டு சென்றார் என்பது வியப்பளிக்கிறது.


Ramkumar Ramanathan
பிப் 27, 2025 22:02

தங்க மனசுக்கு கடவுள் பன்மடங்கு கொடுத்து வாழ்வாங்கு வாழ வைப்பார்


சின்னசேலம் சிங்காரம்
பிப் 27, 2025 21:57

24 கேரட் கோல்ட் தான் உண்மையிலேயே. அருமை


சமீபத்திய செய்தி