உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி /  ஒரு கிலோ மல்லிகை ரூ.7,500க்கு விற்பனை

 ஒரு கிலோ மல்லிகை ரூ.7,500க்கு விற்பனை

சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப் படுகிறது. குறிப்பாக, மல்லிகை, பிச்சி பூ, முல்லை பூ, கனகாம்பரம், மரிக்கொழுந்து போன்ற மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு, சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சில தினங்களாக மல்லிகை பூ விலை கிலோ, 4,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று காலை, திடீரென ஒரு கிலோ, 7,500 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று முகூர்த்த நாள் என்பதோடு, கேரளாவுக்கு அதிகம் விற்பனையாவதாலும் விலை உயர்ந்துள்ளது என, வியாபாரிகள் தெரிவித்தனர். அதே போல, திண்டுக்கல், நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ 3,500 முதல் 5,000 ரூபாய் வரை விற்பனையானது. முல்லை கிலோ 1,700, ஜாதிப்பூ 1,000, ஒட்டு ரக ரோஜா 350, சம்பங்கி, ஓசூர் செவ்வந்தி 300 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை