மேலும் செய்திகள்
விசாரணைக்கு சென்ற போலீசுக்கு அரிவாள் வெட்டு
05-Dec-2025
ஒரு கிலோ மல்லிகை ரூ.7,500க்கு விற்பனை
30-Nov-2025
ஆசிரியர் வெட்டிக்கொலை கிரைண்டர் ஆப் லீலையா
30-Nov-2025
தென்காசி: தென்காசி மாவட்டம் கடையம் மலைக்குகையில் பதுங்கியுள்ள ரவுடி பாலமுருகனை 30, கைது செய்ய போலீசார் மூன்றாவது நாளாக நேற்றும் முயற்சி மேற்கொண்டனர். கடையத்தைச் சேர்ந்த பாலமுருகன் மீது 50-க்கும் மேற்பட்ட கொள்ளை, வழிப்பறி, தாக்குதல் வழக்குகள் உள்ளன. திருநெல்வேலி, தென்காசி, அருப்புக்கோட்டை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. கேரளாவில் திருட்டு வழக்கில் கைதான பாலமுருகன் கேரள மாநிலம் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சமீபத்தில் அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு திருச்சூர் அழைத்துச் செல்லும்போது போலீஸ் பிடியிலிருந்து தப்பினார். அவர் சொந்த ஊரான கடையம் அருகே மலைப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு பலத்த மழையிலும், சக்திவாய்ந்த லேசர் விளக்குகளுடன் போலீசார் மலைப்பகுதியில் ஏறி தேடினர். இந்நிலையில் செங்குத்தான பாறையில் ஏறிய 5 போலீசார் மீண்டும் கீழே இறங்க முடியாமல் சிக்கிக் கொண்டனர். மலையின் நடுப்பகுதியில் தொங்கிய நிலையில் பல மணி நேரம் உயிருக்கு போராடினர்.ஆலங்குளம், தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நேற்று முன்தினம் 5 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர். இதற்கிடையே மலைப்பகுதியில் பதுங்கியிருக்கும் பாலமுருகனை தப்ப விடாமல் பிடிக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் கடையம் மலைப்பகுதியில் முற்றுகையிட்டுள்ளனர். 3வது நாளாக நேற்றும் ட்ரோன் கேமரா மற்றும் உள்ளூர்வாசிகள் உதவியுடன் பாலமுருகனை தேடும் வேட்டை தீவிரமாக நடந்தது. பாலமுருகனை சந்திக்க மலைக்கு சென்ற அவரது மனைவி ஜோஸ்வினா 25, என்ன ஆனார் என்பது குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
05-Dec-2025
30-Nov-2025
30-Nov-2025