உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் /  தி.மு.க., முன்னாள் எம்.பி., வீட்டில் 88 சவரன் கொள்ளை

 தி.மு.க., முன்னாள் எம்.பி., வீட்டில் 88 சவரன் கொள்ளை

தஞ்சாவூர்: தஞ்சாவூரில், தி.மு.க., முன்னாள் எம்.பி., வீட்டில், 88 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகை மாவட்டம், சித்தமல்லியை சேர்ந்தவர் ஏ.கே.எஸ்.விஜயன், 65; நாகை தொகுதி தி.மு.க., முன்னாள் எம்.பி.,யான இவர், தற்போது, தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதி நிதியாகவும், தி.மு.க., விவசாய அணி மாநில செயலராகவும் உள்ளார். தஞ்சாவூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே சேகரன் நகரில், விஜயனுக்கு சொந்தமான வீடு உள்ளது. இங்கு அவரது மனைவி ஜோதிமணி மற்றும் மகள் உள்ளனர். நவ., 28ம் தேதி இரவு ஜோதிமணி, மகளை அழைத்துக் கொண்டு சித்தமல்லி சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், விஜயன் வீட்டின் முன்பக்க கேட் கதவு பூட்டை உடைத்து, வீட்டின் உள்ளே இருந்த பீரோவில் இருந்து, 88 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பினர். நேற்று காலை விஜயன், அவரது மனைவி, மகள், தஞ்சாவூரில் உள்ள வீட்டுக்கு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். போலீசாருக்கு, விஜயன் அளித்த தகவலில், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. சம்பவ இடத்தில் எஸ்.பி., ராஜாராம் விசாரித்தார். அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில், மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை