மேலும் செய்திகள்
நிச்சயதார்த்தத்தை மறைத்த காதலியை கொன்ற காதலன்
27-Nov-2025
போலி நகைகளை அடகு வைத்தவர் கைது
27-Nov-2025
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், பிரசித்த பெற்ற மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், 16 ஆண்டுகளுக்குப்பின் நடந்த கும்பாபிஷேகத்தில், கலந்து கொண்ட பக்தர்கள். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், பிரசித்த பெற்ற மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவில், உலகில் முதலாவாதாக தோன்றிய சைவ கோவிலாகவும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாசி மகா மகம் விழாவிவுக்கு பிரதானமானதாகும் விளங்குகிறது. இக்கோவில், கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. வரும் 2028ம் ஆண்டு, மகாமக விழா நடைபெற உள்ள நிலையில், கோவில் கும்பாபிஷேக்தை நடத்த பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன. கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் துவங்கப்பட்டு, கும்பாபிஷேகத்திற்கு தயாரானது. கடந்த, நவ.27ம் தேதி, முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக யாகம் துவங்கியது. இதில், ஒன்றரை அடி முதல் 9 அடி உயரமுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட 44 கலசங்கள், கோபுரங்களில் பொருத்தப்பட்டது. 10 ஆயிரம் சதுரடி பரப்பளவில், 99 குண்டங்கள் கூடிய உத்தம பட்ச யாக யாகசாலை அமைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், நேற்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, எட்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று, பரிவார பூர்ணாஹூதியுடன் கடம் புறப்பாடாகி, புனித நீர் அடங்கிய கலசத்தினை, சிவச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, சிவவாத்தியங்கள் இசைக்க, காஞ்சி காமகோடி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மங்களாம்பிகையம்மன் கோபுரத்திலும், அமைச்சர்கள் சேகர்பாபு, செழியன் ஆகியோர் மூலவர் கோபுரத்தின் மர படிக்கட்டில் நின்று பச்சை கொடி காட்டியப்பின், ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது பக்தர்கள் கும்பேஸ்வரா…. கும்பேஸ்வரரா என முழக்கமிட்டனர். இதில் மந்த்ராலய மடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள், பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கும்பகோணம் தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன் உள்ளிட்ட, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
27-Nov-2025
27-Nov-2025