உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் /  சக மாணவர்கள் தாக்கியதில்  மூளைச்சாவு அடைந்த பிளஸ் 2 மாணவன் 

 சக மாணவர்கள் தாக்கியதில்  மூளைச்சாவு அடைந்த பிளஸ் 2 மாணவன் 

தஞ்சாவூர்: பட்டீஸ்வரத்தில், சக மாணவர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த பிளஸ் 2 மாணவர், மூளைச்சாவு அடைந்தார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கிடையே முன்விரோதம் காரணமாக, மூன்று மாதத்திற்கு முன் பிரச்னை ஏற்பட்டது. அப்போது, பள்ளி நிர்வாகம் தலையிட்டு இரு தரப்பினரிடையே பேசி சுமுக தீர்வு ஏற்படுத்தியது. தொடர்ந்து டிச., 3ம் தேதி, மதிய உணவு இடைவேளையின் போது, பள்ளி கழிப்பறையில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிளஸ் 1 மாணவர்கள், 15க்கும் மேற்பட்டோர், பட்டீஸ்வரம் தேரோடும் கீழவீதி வழியாக வந்த பிளஸ் 2 மாணவரை டிச., 4ம் தேதி கட்டையால் தாக்கினர். இதில், அந்த மாணவருக்கு மண்டை உடைந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாணவரின் பெற்றோர், கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். போலீசார், 15 மாணவர்களை சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இந்நிலையில், நேற்று காலை அந்த மாணவன் மூளைச்சாவு அடைந்ததால், அவருக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக, தனியார் மருத்துவமனையில் இருந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு ஐந்து டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை