மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் மோதல் மாணவர் மண்டை உடைப்பு
06-Dec-2025
சிறுமி உடலை தோண்டி எடுத்தது மந்திரவாதியா?
05-Dec-2025
15 நாட்களில் உள்வாங்கிய சாலையால் மக்கள் அதிருப்தி
03-Dec-2025 | 2
ஆதிகும்பேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
02-Dec-2025
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 200 விசைப்படகுகள், 4,000 நாட்டுப்படகுகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் 500 விசைப்படகுகள், 2,000 நாட்டுப்படகுகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,000 விசைப்படகுகள், 2,000 நாட்டுப்படகுகள் உள்ளன. இதில் விசைப்படகு மீனவர்கள் சனி, திங்கள், புதன்கிழமைகளிலும், நாட்டுப்படகு மீனவர்கள் ஞாயிறு, செவ்வாய், வியாழன் என மூன்று நாட்களிலும் கடலில் மீன்பிடி தொழிலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், வாரம் முழுதும் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் கடல் பகுதிகளில், அதிக அளவு இன்ஜின் திறன் கொண்ட விசைப்படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். மேலும், அவர்கள் இலங்கை கடல்பகுதி வரை செல்வதால், அப்பகுதி மீனவர்களும் பெரியளவில் பாதிப்பைச் சந்தித்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும், காரைக்கால் மீனவர்கள், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகளை சேதப்படுத்தியும், தாக்கியும் அச்சுறுத்தி வருகின்றனர். இது குறித்து மூன்று மாவட்ட மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், வரும் டிச., 19ம் தேதி கிழக்குக் கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். 900 குதிரைத்திறன் இது குறித்து, தமிழ்நாடு மீனவர் பேரவை சங்க பொதுச்செயலர் தாஜுதீன் கூறியதாவது: தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் பகுதிகளில் விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்தும் படகின் இன்ஜின், 150 குதிரைத்திறன் உடையது தான். ஆனால், காரைக்கால் மீனவர்கள் பயன்படுத்தும் படகில், 400 முதல் 900 குதிரைத்திறன் கொண்ட இன்ஜின்கள் உள்ளன. அவர்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் கடலில் மீன்பிடி பணியில் ஈடுபடுகின்றனர். காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்பகுதி வரை செல்வதால், தமிழக மீனவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. சமீபத்தில் ஆந்திரா கடற்பகுதியில் காரைக்கால் மீனவர்கள் சென்றதால், படகுகளை அந்த அரசின் மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், மீனவர்களின் வலை, படகுகளைச் சேதப்படுத்தியது தொடர்பாக ஒரு கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு கேட்டுள்ளனர். ஆ னால், நம் மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. காரைக்கால் மீனவர்கள் கடல் வளத்தை அழிப்பது மட்டுமில்லாமல், மீனவர்களைத் தாக்கியும், படகு மற்றும் வலைகளைச் சேதப்படுத்தியும் அச்சுறுத்தி வருகின்றனர். புதுச்சேரி மற்றும் தமிழக அரசு, மீனவர்கள் பிரச்னை தொடர்பாகப் பேசி நடவடிக் கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
06-Dec-2025
05-Dec-2025
03-Dec-2025 | 2
02-Dec-2025