உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  குமுளி பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வராததால் ஐயப்ப பக்தர்கள் அவதி

 குமுளி பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வராததால் ஐயப்ப பக்தர்கள் அவதி

கூடலுார்: குமுளியில் பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தும் பயன்பாட்டிற்கு வராததால் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குவது தொடர்ந்துள்ளது. தமிழக கேரள எல்லையில் உள்ள குமுளியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2023 செப்.11ல் பூமி பூஜை நடத்தப் பட்டது. ஓராண்டிற்குள் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் கடந்து சமீபத்தில் கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தன. எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன், கலெக்டர் ரஞ்ஜீத்சிங் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தனித்தனியாக வந்து பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணியை ஆய்வு செய்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தனர். ஆனால் மின் இணைப்பு வழங்குவதில் சிக்கல் இருப்பதாகக் கூறி திறப்பு விழா தாமதமாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை சீசனில் குமுளியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் குமுளி வழியாக வந்த வண்ணம் உள்ளது. தினந்தோறும் காலை, மாலையில் வாகனங்கள் நெரிசலில் சிக்கி பல மணி நேரம் காத்திருந்து கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா காண்பதற்கு முன் நெரிசலை தவிர்க்க தற்காலிகமாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை பஸ்ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் குமுளியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ