மின் மோட்டார் திருட்டு
ஆண்டிபட்டி; கண்டமனூர் அருகே பொன்னம்மாள்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் 60, இவர் கண்டமனூர் - தேக்கம்பட்டி செல்லும் மங்கம்மாள் ரோட்டில் உள்ள தோட்டத்தில் மனைவியுடன் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். தனது தோட்டத்தில் பயன்பாடு இல்லாத போர்வெல்லில் இருந்த மின் மோட்டார் மற்றும் 100 மீட்டர் மின் ஒயர் ஆகிவற்றை கழற்றி வீட்டில் வைத்திருந்தார். ஆகஸ்ட் 8 ல் மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தோட்டத்து வீட்டின் கதவை பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 2 எச்.பி.,மின் மோட்டார், மின் ஒயர், உண்டியலில் இருந்த பணம் ரூ. 2000 ஆகியவற்றை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ஈஸ்வரன் புகாரில் கண்டமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.