உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மேகமலையில் பனிமூட்டம் வாகனங்கள் செல்வதில் சிரமம்

 மேகமலையில் பனிமூட்டம் வாகனங்கள் செல்வதில் சிரமம்

சின்னமனூர்: சின்னமனூரிலிருந்து மேகமலைக்கு செல்லும் ரோட்டில் பனிமூட்டம் உள்ளதால் வாகனங்களை ஒட்டிகள் சிரமப்படுகின்றனர். மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மேகமலை பிரதான இடம் பிடிக்கின்றன. இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், அடர்ந்த காடுகள், வழிநெடுகிலும் தேயிலை தோட்டங்கள், வளைந்து நெளிந்து செல்லும் ரோடுகள் என ரம்மியமான பகுதிகளாகும். ஹைவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு, வெண்ணியாறு, மகாராஜா மெட்டு என பல பகுதிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டமாகவே உள்ளது. மழை பொழிய மேக கூட்டங்கள் தயாராக உள்ளன. தென்பழநியில் இருந்து ஆரம்பிக்கும் பனி மூட்டம் இரவங்கலாறு வரை நீள்கிறது. குறிப்பாக ஹைவேவிஸ் மலை ரோட்டில் அதிகபனி மூட்டம் நிலவுவதால் வாகனங்கள் மிகவும் மெதுவாக சென்றன. வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். பெரும்பாலான வாகனங்கள் முகப்பு மஞ்சள் விளங்குகளை ஒளிர விட்டு சென்றன. அதிக குளிர், பனி, பனிக்காற்று என மேகமலை ஜில் பகுதியாக மாறி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி