உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பா.ஜ., மாநில தலைவர் காரை அசுர வேகத்தில் முந்தியவரிடம் விசாரணை

 பா.ஜ., மாநில தலைவர் காரை அசுர வேகத்தில் முந்தியவரிடம் விசாரணை

கடமலைக்குண்டு: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, கடமலைக்குண்டில் நடந்த திருமண நிகழ்ச்சிக்காக நேற்று மதியம் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சி நிர்வாகிகள் கார்களில் சென்றனர். கடமலைக்குண்டு அய்யனார்புரம் அருகே கார்கள் சென்றபோது அசுர வேகத்தில் புழுதி பறக்க ஒரு கார் அவர்களை முந்தி சென்றது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பா.ஜ., வினர் அந்த கார் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து வேகமாக சென்ற காரை கடமலைக்குண்டு போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசார் விசாரணையில் காரை ஓட்டிச் சென்ற ராயப்பன்பட்டியை சேர்ந்த அரவிந்தன் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த கார் கடமலைக்குண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அசுரவேகத்தில் காரை ஓட்டிச் சென்ற அரவிந்தன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை