| ADDED : டிச 02, 2025 05:46 AM
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் உபயதாரர்கள் மூலம் ரூ.பல லட்சம் செலவில் புனரமைப்பு பணிகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 27ல் கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் துவங்கியது. நவம்பர் 29ல் முதல்கால யாக பூஜை, மூல மந்திர ஜெய ஹோமம், நவம்பர் 30ல் மூலவர் முத்துமாரியம்மன், பரிவார தெய்வங்களுக்கும் எந்திர ஸ்தாபனம் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 2, 3 ம் கால யாக பூஜையும், நேற்று 4ம் கால யாக பூஜையுடன் மஹா கும்பாபிஷேகமும் தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., மகாராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஓ.எம்.எஸ்., தக்காளி கமிஷன் மண்டி உரிமையாளர் ராஜேந்திரன், எஸ்.எம்.எஸ்.டெக்ஸ் சுப்பிரமணி, ஸ்ரீராம் குரூப்ஸ் நிறுவனர் சேட்டுபரமேஸ்வரன், கவிதா டெக்ஸ் உரிமையாளர் பழனிச்சாமி, சமூக ஆர்வலர் மாரிமுத்து உட்பட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.