கம்பம்: கம்பம் காசி விஸ்வநாதர் கோயில் சிவாச்சார்யார்களின் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கலசங்களில் புனித நீர் ஊற்றியபோது பக்தர்கள் 'ஹர ஹர மகாதேவா' என கோஷமிட்டு பரவசவம் அடைந்தனர். கம்பத்தில் கம்பராயப் பெருமாள் மற்றும் காசி விஸ்வநாதர் கோயிலில் ஒரே வளாகத்தில் சிவனும், பெருமாளும் தனித் தனி சன்னதிகளில் தனித்தனி கொடிமரங்களுடன் இருப்பது தனிச் சிறப்பாகும். இங்குள்ள காசி விஸ்வநாதர் கோயில் 22 ஆண்டுகளுக்கு பின் திருப்பணிகள் உபயதாரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நவ. 27 ல் துவங்கியது. அடுத்தடுத்து மூன்றாம், நான்காம், ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. யாகசாலை பூஜைகளில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று அதிகாலை 3:15 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை 5:00 மணிக்கு பூர்ண ஹுதி தீபாரதனையை தொடர்ந்து 6:20 மணியளவில் கடம் புறப்பாடு நடந்தது. சிவாச்சார்யார்கள் புனித நீர்குடங்களுடன், சிவ வாத்தியங்கள் இசைக்கவும் கோபுரத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். காலை 6:38 மணிக்கு காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி அம்மன் பரிவார விமானங்களுக்கும் கோபுர கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீர் கோபுர கலசங்களின் மீது சிவாச்சார்யார்கள் ஊற்றியதும், திரண்டிருந்த பக்தர்கள் 'ஹர ஹர மகாதேவா' என கோஷம் எழுப்பினர். பக்தர்கள் மீது புனித தெளிக்கப்பட்டது. பிரமாண்ட அன்னதானம் தென்னிந்திய வாணியர்கள் சங்க மாநில துணை தலைவர் ஆர்.சுந்தரவடிவேல், தேனி டாக்டர் ஆர். ராஜமணிகண்டன் சார்பில் 20 ஆயிரம் பேர்களுக்கு ஐந்து வகை சாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. கோயிலின் அனைத்து வாயில்கள், மெயின்ரோடு, வேலப்பர் கோயில் வீதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான நிகழ்ச்சிகளை கண்ணகி அறக்கட்டளை பொருளாளர் முருகன், வாணியர் சங்க மாவட்ட செயலாளர் கனகு, பொருளாளர் கனகு ஒருங்கிணைத்தனர். உபயதாரர்கள் கவுரவிப்பு கோயில் திருப்பணிகளை கம்பம் இராமலிங்கம் பிள்ளை டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஆர். பாஸ்கர், டி.கே. நடராஜ பிள்ளை குடும்பத்தார், ஏ.எம்.குமரன், பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா , கோவை ஜி.ஆர்.டி. பத்மனாபன் , சாய் சேவா டிரஸ்ட் குமார் ஆகியோர் செய்திருந்தனர். கும்பாபிஷேக முடிவில் உபயதாரர்களை எம்.எல்.ஏ., இராமகிருஷ்ணன் சால்வை அணிவித்த கவுரவித்தார். செயல் அலுவலர் பொன்முடி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெயபாண்டியன், முருகேசன் மற்றும் அனைத்து சமுதாய தலைவர்களும் உடனிருந்தனர். பங்கேற்றவர்கள் விபரம்: கும்பாபிேஷகத்தில் நகராட்சி தலைவர் வனிதா, வழக்கறிஞர் நெப்போலியன், விவசாய சங்க தலைவர் ஓ.ஆர். நாராயணன், ஆர்த்தி பேக்கரி எஸ்.ராஜேந்திரன், முன்னாள் நகராட்சி தலைவர் ராஜாமணி, நாகமணியம்மாள் பள்ளி தாளாளர் காந்தவாசன், வர்த்தக சங்க தலைவர் முருகன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் , ஒட்டல் சங்க அமைப்பாளர் முருகன், தி.மு.க. நகர் செயலாளர்கள் பால்பாண்டி ராஜா, வீரபாண்டியன், கவுன்சிலர் செந்தில், வெங்கடேஷ்வரா டிம்பர்ஸ் சொக்க ராஜா, ஐயப்பா சேவா சங்க தலைவர் பெருமாள், நாலாந்தா பள்ளி தாளாளர் விஸ்வநாதன். ஜெய்டெக் பள்ளி சேர்மன் ஜெகதீஷ், ஆர்ஆர். பள்ளி சேர்மன் இராஜாங்கம், சக்திவிநாயகர் பள்ளி சேர்மன் அச்சுத நாகசுந்தர், டாக்டர் சூர்யகுமார், இன்டேன் கேஸ் பொன் காட்சி கண்ணன். டாக்டர் செல்வம், வேளாண் அலுவலர் மாரிச்சாரி, ஏல விவசாயி மாசாணராஜா, ஒப்பந்தகாரர் எல்.இராஜேந்திரன், கம்பம் டிராவல்ஸ் மாரியப்பன், கே.ஆர்.எஸ். டிராவல்ஸ் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.