உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பெண் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்

 பெண் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்

கம்பம்: காமயகவுண்டன்பட்டி கஸ்தூரிபாய் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வளரிளம் பெண் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் வளரிளம் பெண் குழந்தைகள் சந்திக்கும் உடலியல், சமூகவியல், உணவியல், மனவியல் பிரச்னைகள் குறித்து டாக்டர்கள் விளக்கினர். வளரிளம் பருவத்தில் ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள், இரத்தச்சோகை , மன அழுத்தம், அதற்கான தீர்வுகள் குறித்து விளக்கப்பட்டது. சினைப்பை நீர்க் கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிடாய், அதை சரி செய்ய கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், ரத்த சோகையினால் ஏற்படும் பாதிப்பு , மனச்சோர்வு பிரச்னைகக்கு தீர்வு கூறப்பட்டது. மாதவிடாய் பிரச்னையை தீர்க்கும் பெமி கியூர் டானிக்குகள், கருப்பையை பாதுகாக்கும் கற்றாழை லேகியம் வழங்கப்பட்டது. முகாமில் டாக்டர் முருகானந்தன், சித்தா டாக்டர் சிராசுதீன், மருந்தாளுனர் பசும்பொன் , சுகாதார ஆய்வாளர் பிரபு ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தலைமையாசிரியை கிருஷ்ணவேணி ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை