மேலும் செய்திகள்
கண்டமனுார், உத்தமபாளையம் பசுமை பள்ளி திட்டத்தில் தேர்வு
40 minutes ago
இன்றைய நிகழ்ச்சி.......தேனி
40 minutes ago
கம்பம் கவுன்சிலர்கள் 17 பேர் ராஜினாமா
1 hour(s) ago
57 கிலோ கஞ்சா காருடன் மூவர் கைது
23 hour(s) ago
தேவாரம்: மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் 3வது சோமவார சங்காபிஷேக பூஜைகள் கோலாகலமாக நடந்தது. கார்த்திகை 3 வது சோமவார பூஜையை முன்னிட்டு தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் உள்ள சோம சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகளும், சுந்தரேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்து உள்ள கயிலாய மேலச்சொக்கநாதர் கோயில், போடி சுப்பிரமணியர் சுவாமி கோயில், குலாலர் பாளையம் விநாயகர் கோயில், திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில் சோமவாரத்தை முன்னிட்டு ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மன், பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடந்தது. வரசித்தி விநாயகர் கோயிலில் சொர்ணகிரீஸ்வரர் (சிவனுக்கு) 108 சங்காபிஷேகம் பூஜை நடந்தது. காளஹஸ்தீஸ்வரர் ஞானாம்பிகை அம்மன் கோயில், வைத்தீஸ்வரன் தையல் நாயகி அம்மன், கம்பம் ரோடு காளியம்மன் கோயிலில் சிவனுக்கு 108 சங்காபிஷேகம் பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
40 minutes ago
40 minutes ago
1 hour(s) ago
23 hour(s) ago