உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  இடுக்கியில் டிச.9ல் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தயார்

 இடுக்கியில் டிச.9ல் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தயார்

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் டிச.9ல் நடக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் டிச.9,11 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. இடுக்கி மாவட்டத்தில் முதல்கட்டமாக டிச.9ல் தேர்தல் நடக்கிறது. நவ.21 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். மனுக்கள் பரிசீலனை நவ.22ல் நடக்கும். மனுக்கள் வாபஸ் பெற நவ.24 இறுதி நாளாகும். டிச.13ல் ஓட்டுகள் எண்ணப்படும். இம்மாவட்டத்தில் 52 ஊராட்சிகள் ( 834 வார்டுகள்) 8 ஊராட்சி ஒன்றியங்கள் ( 112 வார்டுகள்) 2 நகராட்சிகள் ( 73 வார்டுகள்) மாவட்ட ஊராட்சி ஒன்று (17 வார்டுகள்) ஆகியவை உள்ளன. தேர்தலுக்கு ஊராட்சிகளில் 1119, நகராட்சிகளில் 73 என 1192 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்படும். தேர்தலுக்கு பயன்படுத்தும் பொருட்களை வினியோகிக்கும் மையங்கள், ஓட்டு பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் மையங்கள் ஆகியவை கண்டறியப்பட்டன. ஓட்டு பதிவுக்கு 2194 கன்ரோல் யூனிட், 6467 பேலட் யூனிட் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளித்தப்பட்டது. எனவே தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ