உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  தேனி சுப்பன் தெருவில் வாடகை கட்டடத்தில் ரேஷன்கடை

 தேனி சுப்பன் தெருவில் வாடகை கட்டடத்தில் ரேஷன்கடை

தேனி: தேனி நகராட்சி 30வது வார்டில் சுப்பன்செட்டி தெரு, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ளது. இந்த தெருவில் வசிப்போர் பெரியகுளம் ரோடு சந்தை அருகே உள்ள தேனி கூட்டுறவு மொத்த விற்பனை சங்க ரேஷன்கடையில் பொருட்கள் வாங்குகின்றனர். ரேஷன் பொருட்கள் வாங்க நீண்ட துாரம் உள்ள கடைக்கு போக்கு வரத்து நெரிசலை கடந்து சென்று வரும் சூழல் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் பஸ் ஸ்டாண்ட் அருகே புதிய ரேஷன் கடை அமைத்தனர். இந்த கடை பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பயன்பாட்டிற்கு கொண்டு வர ஆய்வு செய்த போது பொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள் வந்து செல்ல பாதை வசதி இல்லாததால் கடை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது என தெரிந்தது. தற்போது பொதுமக்கள் வசதிக்காக சுப்பன்செட்டி தெருவில் தனியார் கட்டடத்தில் ரேஷன்கடை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை