| ADDED : டிச 07, 2025 08:45 AM
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் தினேசன்செருவாட் உத்தரவிட்டார். இம்மாவட்டத்தில் முதல்கட்டமாக டிச.9 ல் தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை டிச.13ல் நடக்கிறது. அதனால் ஓட்டுச்சாடிகள், தேர்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் வினியோகம், ஓட்டு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையம் ஆகியவை செயல் படும் பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடிகள் உள்பட தேர்தல் தொடர்பான கல்வி நிறுவனங்களுக்கு டிச.8 லும், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் கல்வி நிறுவனங்களுக்கு டிச.13லும் விடுமுறை அளித்து இடுக்கி கலெக்டர் தினேசன்செருவாட் உத்தரவிட்டார். தேர்தல் நாளான டிச.9ல் பொது விடுமுறை என்பது குறிப்பிடதக்கது.