உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஆற்றில் மாணவரை தேடும் பணி தீவிரம்

 ஆற்றில் மாணவரை தேடும் பணி தீவிரம்

தேனி: தேனி சுப்பன்செட்டி தெரு தொழிலாளி அழகர்சாமி. இவரது மகன் அர்ஜூன் 14. அரசு உதவி பெறும் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார். நவ.29ல் விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்ற அர்ஜூன் வீடு திரும்ப வில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். மாணவர், தனதுநண்பர்களுடன் பென்னிகுவிக் நகர் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்றது தெரியவந்தது. தேடுதல் பணி தீவிரம் இதனால் தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் பாலமுருகன் தலைமையில் தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம் தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக தேடினர். நேற்று முன்தினம் (டிச.30ல்) மதியம் 12:00 மணி முதல் மாலை 6:30 மணி வரையும், நேற்று டிச.1ல் காலை 6:00 முதல் மாலை 7:00 மணி வரை அரண்மனைப்புதுார் மேற்குப்பாலம் முதல் குன்னுார் வைகை பாலம் வரை தேடினர். இருப்பினும் மாணவர் கிடைக்க வில்லை. இன்றும் தொடர் தேடுதல் பணி நடக்க உள்ளது என தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் ஜெகதீஸ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை