உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  10 கிலோ கஞ்சா வைத்திருந்த பெண் உட்பட மூவர் கைது

 10 கிலோ கஞ்சா வைத்திருந்த பெண் உட்பட மூவர் கைது

தேனி: தேவாரத்தில் 10 கிலோ கஞ்சா வைத்திருந்த பெண் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 5 அலைபேசி, ஒரு டூவீலரும் கைப்பற்றினர். தேவாரம் எஸ்.ஐ., மணிமாறன் தலைமையிலான போலீசார் லட்சுமிநாயக்கன்பட்டி சமத்துவபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் சந்தேகம்படும் படி நின்றிருந்த தேவாரம் நிவேதா 30, சேலம் அம்மாபேட்டை விக்னேஷ் 30, தர்மபுரி பென்னாகரம் சக்தி 42, ஆகியோரை சோதனை செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை கைப்பற்றி, மூவரையும் கைது செய்தனர். 5 அலைபேசிகள், ஒரு டூவீலர் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை