/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தினமலர் செய்தி எதிரொலி: ஆரணி ஆற்று பால சாலை இரும்பு சட்டம் பகுதி சீரமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி: ஆரணி ஆற்று பால சாலை இரும்பு சட்டம் பகுதி சீரமைப்பு
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் மேல், 2017ம் ஆண்டு, 27.8 கோடி ரூபாயில் கட்டப்பட்ட பாலம், தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்த பாலம், 450 மீட்டர் துாரம், 15 மீட்டர் அகலத்தில் உள்ளது. இரண்டு பக்கமும், 1.5 மீட்டர் சாலை உள்ளது.இதன் வழியே, தினமும், 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. பாலத்தின் சாலையில் குறிப்பிட்ட இடைவெளியில், இரும்பு சட்டம் வாயிலாக இணைக்கப்பட்டு உள்ளது.போந்தவாக்கத்தில் இருந்து, ஊத்துக்கோட்டை நோக்கி வரும் நிலையில், பாலத்தின் தொடக்கத்தில் உள்ள இரும்பு சட்டம் உள்ள பகுதி தேசம் அடைந்து இருந்தது.இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் படத்துடன் வெளியானதையடுத்து, திருவள்ளூர் நெடுஞ்சாலைத் துறையினர், ஆரணி ஆற்று பாலத்தில் சேதமடைந்த இரும்பு சட்டம் பகுதியை சீரமைத்தனர்.