உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  திருவள்ளூர் - மயிலாப்பூர் இடையே 4 வழிச்சாலை: ரூ.88 கோடி ஒதுக்கீடு

 திருவள்ளூர் - மயிலாப்பூர் இடையே 4 வழிச்சாலை: ரூ.88 கோடி ஒதுக்கீடு

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் - மயிலாப்பூர் இடையே 15.5 கி.மீ.,யை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய, 88 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் சாலை 26 கி.மீ., தூரமுடையது. இதனிடையே போந்தவாக்கம், கச்சூர், சீத்தஞ்சேரி, மயிலாப்பூர், ஒதப்பை, பூண்டி, புல்லரம்பாக்கம் மற்றும் இணைப்பு சாலை வழியே, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் வேலை, கல்வி, கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு, இச்சாலை வழியாக தான் செல்ல வேண்டும். தினமும் 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இச்சாலையில் பயணிக்கின்றன. திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள், ஆந்திராவின் சத்தியவேடு, தடா, சூளூர்பேட்டை, நெல்லுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, இச்சாலை வழியாக பயணிக்க வேண்டும். ஊத்துக்கோட்டை, ஆரணி ஆற்று பாலம் துவங்கி பெரிஞ்சேரி வரை, 2.6 கி.மீ., இருவழிச் சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, 20 கோடி ரூபாயில் நடந்து முடிந்தது. தற்போது, மயிலாப்பூர் துவங்கி திருவள்ளூர் டோல்கேட் வரை, 15.5 கி.மீ., நான்கு வழிச்சாலையாக மாற்ற, 88 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணி துவங்கியுள்ளது. இச்சாலை, 30 மீட்டர் அகலத்தில், சாலை மைய தடுப்புடன் அமைய உள்ளது. எட்டு மாதங்களில் பணிகள் நிறைவுபெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை