இந்தியன் ஆயில் எரிவாயு முனைய ஒப்பந்த தொழிலாளர்கள் மீது வழக்கு
மீஞ்சூர்: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள இந்தியன் ஆயில் எரிவாயு முனையத்தில், ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 7ம் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அந்நிறுவனத்தின் தலைமை மேலாளர் சொக்கலிங்கம் என்பவரை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் தாக்கியதாக, மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, மீஞ்சூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் ஐந்து பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். ஐந்தாவது நாளாக நேற்றும் தொழிலாளர்களின் போராட்டம் தொடரும் நிலையில், தற்போது அவர்களில் ஐந்து பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தொடர்ந்து, நிறுவனத்தின் அதிகாரிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.