மேலும் செய்திகள்
எச்.ஐ.வி., தொற்றால் பாதித்த 18 பேருக்கு ரூ.2 லட்சம் உதவி
15 minutes ago
பள்ளி, கல்லுாரிக்கு இன்று விடுமுறை
16 minutes ago
சோமநாதீஸ்வரர் கோவிலில் சோமவார உத்சவம்
18 minutes ago
திருவள்ளூர்: 'டிட்வா' புயல் காரணமாக, நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து மழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் குளமாக தேங்கியது. கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தோர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் 'டிட்வா' புயல் காரணமாக நேற்று, வானிலை மையத்தின் சார்பில், 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டது. காலையில் மழையில்லாததால், பள்ளிக்கு சென்ற மாணவ - மாணவியர், மாலையில் கொட்டும் மழையில் நனைந்து வீட்டிற்கு திரும்பினர். முன்கூட்டியே மழையை கணிக்காமல் விடுமுறை அளிக்காததால், மாணவ - மாணவியர் கடும் அவதிப்பட்டனர். திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு, மழை காரணமாக குறைந்தளவு மக்களே மனு அளிக்க வந்ததால், கலெக்டர் அலுவலகம் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. நேற்று, நிலம் சம்பந்தமாக 53, சமூக பாதுகாப்பு திட்டம் 39, வேலைவாய்ப்பு வேண்டி 35, பசுமைவீடு, அடிப்படை வசதி கோரி 32, இதர துறை 36 என, மொத்தம் 195 மனுக்கள் பெறப்பட்டன. தாட்கோ சார்பில், 9 பேருக்கு, தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 45 லட்சம் ரூபாய் மானியத்தில், 97.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நில ஆவணத்தை கலெக்டர் வழங்கினார். மாவட்ட அளவில் நடந்த ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற 25 மாற்றுத்திறனாளிகளுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
15 minutes ago
16 minutes ago
18 minutes ago