| ADDED : டிச 07, 2025 06:32 AM
திருவாலங்காடு: களாம்பாக்கத்தில், கழிவுநீர் பாதையில் குப்பை, மாட்டுச்சாணம் கொட்டப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசி வருகிறது. திருவாலங்காடு ஒன்றியம் களாம்பாக்கம் ஊராட்சியில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பேரம்பாக்கம் -திருவாலங்காடு மாநில நெடுஞ்சாலை மற்றும் காலனி பகுதியில் 200 குடும்பங்கள் வசிக்கும் நிலையில் அப்பகுதியில் சேகரமாகும் கழிவுநீர் செல்ல அதே பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பின்றி ஆறு மாதமாக விடப்பட்டுள்ளதால், கழிவுநீர் கால்வாயை சூழ்ந்து செடிகள் முளைத்துள்ளன. சமூக விரோதிகள் சிலர் குப்பை கழிவுகளை அங்கு கொட்டி வருகின்றனர். தற்போது வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், செல்ல பாதையின்றி கழிவுநீருடன் குப்பை கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. அதேபோன்று மறுபுறம் உள்ள மாநில நெடுஞ்சாலையில் மூன்று இடங்களில் மாட்டுச்சாணம் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.