| ADDED : நவ 14, 2025 02:02 AM
திருவாலங்காடு: ராஜபத்மாபுரத்தில் மின்கம்பங்கள் பராமரிப்பின்றி, 'கொடி மரங்களாக' மாறியுள்ளன. திருவாலங்காடு மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்டு, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. திருவாலங்காடு அடுத்த ராஜபத்மாபுரத்தில், அரசு துவக்கப் பள்ளி எதிரே உள்ள மின்கம்பத்தில் கொடிகள் வளர்ந்து, கம்பம் முழுக்க படர்ந்துள்ளது. இது, மின்வாரியம் பராமரிப்பில் காட்டும் மெத்தனத்தை காட்டுவதாக உள்ளது. இந்த கொடிகள், மின்கம்பம் முழுக்க ஆக்கிரமிக்க பல மாதங்களாகி இருக்கும். அதுவரை இந்த மின்கம்பங்கள் பராமரிக்கப்படவில்லை. ஒவ்வொரு மாதமும் தவறாமல் மின்பாதை பராமரிப்பு பணி எனக்கூறி, பகல் முழுக்க மின் தடை செய்யப்படுகிறது. அப்போது, மின்கம்பத்தை ஏன் பராமரிக்கவில்லை என, பகுதிமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, மின்கம்பங்களை பராமரிப்பதில் மின்வாரியம் அக்கறை காட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.