உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கோவில் மண்டபம் அமைக்கும் பணிக்கு கொக்கி போட்டு மின்சாரம் திருட்டு

 கோவில் மண்டபம் அமைக்கும் பணிக்கு கொக்கி போட்டு மின்சாரம் திருட்டு

திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் மண்டகப்படி மண்டபம் சீரமைக்கும் பணிக்கு மின் கம்பத்தில் இருந்து கொக்கி போட்டு மின்சாரம் திருடப்படுவதால் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான மண்டகப்படி மண்டபம் தேரடி அருகே உள்ளது. இந்த மண்டபத்தில் தேர் திருவிழாவின் போது நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படும். இம்மண்டபம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாழடைந்து பயன்பாடின்றி இருந்தது. இந்நிலையில் கோவில் நிர்வாகம் சீரமைக்கும் பணியை செய்து வருகிறது. இதற்காக அருகே உள்ள மின் கம்பத்தில் இருந்து கொக்கிப்போட்டு மின்சாரம் திருடப்பட்டு வருகிறது. சாலையை கடந்து ஒயர் அமைத்து மின்சாரம் திருடப்படுவதால் அவ்வழியே செல்வோர் மின் விபத்து ஏற்படுமோ என அச்சமடைந்து உள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை