உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  குரங்கு தொல்லை அதிகரிப்பு வேடிக்கை பார்க்கும் வனத்துறை

 குரங்கு தொல்லை அதிகரிப்பு வேடிக்கை பார்க்கும் வனத்துறை

திருவாலங்காடு: சின்னம்மாபேட்டையில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளதால், அவற்றை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை கிராமத்தில், 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, ரயில் நிலைய சாலை, அரிசந்திராபுரம், தொழுதாவூர் சாலைகளில், 100க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரிகின்றன. அவை, வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை நாசம் செய்கின்றன; வணிக வளாகங்கள், உணவகங்கள், விவசாய நிலங்களில் பொருட்களை சேதப்படுத்துகின்றன; சாலையில் செல்வோரிடம் பொருட்களை பிடுங்கி விடுகின்றன. மேலும், 24 மணி நேரமும் போக்குவரத்து உள்ள சாலையில், 100க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரிகின்றன. அவை சாலையில் ஓடுவதும், தாவுவதுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சின்னம்மாபேட்டை சாலையில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடிக்க, திருத்தணி வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை