மேலும் செய்திகள்
நாய்களால் ரயில் பயணியர் அச்சம்
4 minutes ago
கால்நடை கிளை நிலையம் அமைக்க வலியுறுத்தல்
5 minutes ago
இன்று இனிதாக
6 minutes ago
திருவாலங்காடு: திருவாலங்காடில் தர்மசாஸ்தா கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. திருவாலங்காடு சன்னிதி தெருவில், அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இந்நிலையில், அய்யப்ப பக்தர்கள் ஒன்று சேர்ந்து, தர்மசாஸ்தாவுக்கு கோவில் கட்டி, கும்பாபிஷேக விழாவிற்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் கொடி ஏற்றத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை நடைபெற்றன. நேற்று காலை 6:30 மணிக்கு தர்மசாஸ்தா கோவில் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். பின், தர்மசாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
4 minutes ago
5 minutes ago
6 minutes ago