சிறுமியிடம் ஆபாச வீடியோ காட்டியவர் கைது
திருவாலங்காடு: மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம், மொபைல்போன் மூலம் ஆபாச வீடியோ காட்டி, அத்துமீற முயன்றவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகுமார், 35; கூலி தொழிலாளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம், மொபைல்போனில் ஆபாச வீடியோ காட்டி, 'அதேபோல் இருக்கலாம்' எனக் கூறியுள்ளார். உடனே சிறுமி, அவரிடம் இருந்து தப்பித்துக் கொண்டு பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து, சசிகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.