உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  திருப்பாச்சூர் சாலையில் மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

 திருப்பாச்சூர் சாலையில் மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

திருவள்ளூர்: திருவள்ளூர்- திருப்பாச்சூர் சாலை மழையால் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். திருவள்ளூரில் இருந்து கடம்பத்துார், பேரம்பாக்கத்திற்கு திருப்பாச்சூர் வழியாக, தினமும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக, இலகு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்பாச்சூரில் இருந்து, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பணிக்கு செல்வோர், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக, ஏராளமானோர் இந்த சாலை வழியாக, திருவள்ளூர் வந்து செல்கின்றனர். இச்சாலையில், அதிகளவில் கனரக வாகனங்கள் பயணிப்பதால் சாலை சேதமடைந்து, குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் கன மழையால், இச்சாலை மேலும் சேதமடைந்து விட்டது. சேதமடைந்த சாலை பள்ளத்தில், தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால், இரவில் செல்லும் வாகன ஓட்டிகள், தவறி விழுந்து, விபத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, நெடுஞ்சாலை துறையினர் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை