உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ஒரே மாதத்தில் முருக்கம்பட்டு ரயில்வே சுரங்கப்பாதை சேதம்

 ஒரே மாதத்தில் முருக்கம்பட்டு ரயில்வே சுரங்கப்பாதை சேதம்

திருத்தணி: முருக்கம்பட்டு பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை சீரமைத்து, ஒரே மாதத்தில் சேதம் அடைந்து தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். திருத்தணி ஒன்றியம் முருக்கம்பட்டு ஊராட்சியில், கீழ் முருக்கம்பட்டு, மேல்முருக்கம்பட்டு, மோட்டூர், சிங்கராஜபுரம் கிராமங்கள் உள்ளன. முருக்கம்பட்டு பேருந்து நிறுத்தத்தில் இருந்து மேல்முருக்கம்பட்டு, சிங்கராஜபுரம், மோட்டூர் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு தானியங்கி ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டும். இந்த கேட் வழியாக செல்லும் போது, விபத்துக்கள் அதிகளவில் நடந்து வந்தால், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் ரயில்வே நிர்வாகம், மக்கள், வாகனங்கள் செல்வதற்கு வசதியாக தானியங்கி கேட்டை அப்புறப்படுத்தி, அதே பகுதியில் சுரங்கப்பாதை ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் மற்றும் மக்கள் ரயில்வே சுரங்கப்பாதை வழியாக மேற்கண்ட கிராமங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், சுரங்கப்பாதையில் கான்கிரீட் சாலை சேதம் அடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து ரயில்வே நிர்வாகம் உடனடியாக கான்கிரீட் சாலையை சீரமைத்தது. ஆனால் முறையாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாததால் ஒரே மாதத்தில் மீண்டும், சுரங்கப் பாதை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறியது. இதில் மழைநீர் தேங்கியது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் சுரங்கப்பாதையில் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, சுரங்கப்பாதையை தரமாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை