உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.1.32 கோடி

திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.1.32 கோடி

திருத்தணி: முருகன் கோவிலில், 27 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக, 1.32 கோடி ரூபாய் உண்டியலில் செலுத்தியுள்ளனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த மாதம் நடந்த கந்தசஷ்டி விழாவில், புஷ்பாஞ்சலி மற்றும் திருக்கல்யாணம் நிகழ்ச்சியில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று மூலவரை தரிசித்தனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை ரொக்கம், தங்கம், வெள்ளி என, பலவகையான பொருட்களை மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தினர். அந்த வகையில், கடந்த 27 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை, கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி மற்றும் அறங்காவலர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டன. இதில், 1 கோடியே, 32 லட்சத்து, 33,116 ரூபாய், 713 கிராம் தங்கம், வெள்ளி 8 .459 கிலோ ஆகியவை இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை