| ADDED : டிச 02, 2025 04:22 AM
திருவாலங்காடு: பரேஸ்புரம் பயணியர் நிழற்குடை, போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அலங்கோலமாக மாறியுள்ளது. போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது ஊராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். திருவாலங்காடு அருகே பரேஸ்புரம் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, 5,000க்கும் மேற்பட்ட பயணியர் திருவள்ளூர், அரக்கோணம் நகரங்களுக்கு பேருந்து மூலம் பயணிக்கின்றனர். பயணியர் வசதிக்காக கட்டப்பட்ட நிழற்குடையை சுற்றிலும், அரசியல் கட்சியினர் போட்டி போட்டு விளம்பர போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதனால், நிழற்குடை அலங்கோலமாக மாறியுள்ளது. இதுகுறித்து பயணியர் கூறியதாவது: ஊராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை சுற்றி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஊராட்சி அதிகாரிகள் விதிமுறையை மீறி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.