மேலும் செய்திகள்
நல்ல தண்ணீர் குளம் குப்பை கொட்டி நாசம்
25-Apr-2025
தண்ணீர்குளம்:திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் பகுதியில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழி புறவழிச்சாலை பணி நடந்து வருகிறது.இதில் தண்ணீர்குளம் கிராமத்திற்கு செல்வதற்கு சாலை வசதி இல்லாததால் 3 கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதையடுத்து நேற்று பகுதிவாசிகள் 30க்கும் மேற்பட்டோர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தயாளன் மற்றும் பூந்தமல்லி தொகுதி முன்னாள் அ.தி.மு.க, எம்.எல்.ஏ., ஏழுமலை தலைமையில் 30 பேருடன் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த செவ்வாப்பேட்டை காவல் ஆய்வாளர் ஜெயகிருஷ்ணன், பின் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி உதயசூரியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடத்திய சமாதான பேச்சில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் உயர் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
25-Apr-2025