மேலும் செய்திகள்
உலக மண் தின விழா
11 minutes ago
பிளாஸ்டிக் கழிவுகளால் சீரழியும் குளக்கரை
16 minutes ago
ஊத்துக்கோட்டை:சமீபத்தில் பெய்த மழையால் தேங்கிய நீரில், வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை கழுவி சுத்தம் செய்கின்றனர். தச்சூர் - சித்துார் ஆறுவழிச் சாலை ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் கிராமத்தில் செல்கிறது. சாலைப் பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில், போந்தவாக்கம் கிராமத்தில் இருந்து மேற்கண்ட சாலைக்கு செல்ல இணைப்பு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் பெய்த பலத்த மழையால் ஊத்துக்கோட்டை, போந்தவாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் தேங்கி, குளம் போல் காட்சியளிக்கிறது. இவ்வாறு தேங்கிய மழைநீரில் அவ்வழியே, 'டூவீலர்'களில் செல்பவர்கள் தங்களது வாகனங்களை, தேங்கியுள்ள மழைநீரில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முழு பயன்பாட்டிற்கு வரும் முன் ஒரு நாள் மழைக்கே தண்ணீர் தேங்குவதால், ஆறு வழிச் சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை வழியே செல்ல வாகன ஓட்டிகள் அவதிப்படுவர்.
11 minutes ago
16 minutes ago