உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ஆகாயத்தாமரை சூழ்ந்த குளத்தை சீரமைக்க கோரிக்கை

 ஆகாயத்தாமரை சூழ்ந்த குளத்தை சீரமைக்க கோரிக்கை

பொன்னேரி: ஆகாயத்தாமரை வளர்ந்துள்ள காணியம்பாக்கம் குளம் சீரமைக்க, கிராம மக்கள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பொன்னேரி அடுத்த காணியம்பாக்கம் கிராமத்தில் உள்ள குளம், ஆகாயத்தாமரை சூழ்ந்து பராமரிப்பின்றி உள்ளது. குளத்தில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை, காணியம்பாக்கம், தேவதானம், குளத்துமேடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால், தற்போது குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது. ஆனால், ஆகாயத்தாமரை சூழ்ந்திருப்பதால், அதில் தேங்கியுள்ள தண்ணீரை கிராம மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது, கிராம மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, காணிம்பாக்கம் குளத்தில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்றி, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ