உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ஊராட்சி செயலர்கள் பற்றாக்குறை அடிப்படை வசதி கிடைப்பதில் சிக்கல்

 ஊராட்சி செயலர்கள் பற்றாக்குறை அடிப்படை வசதி கிடைப்பதில் சிக்கல்

திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிக்கு செயலர்களுக்கு 13 பேர் மட்டுமே பணிபுரிவதால் கிராமங்களில் குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திருத்தணி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளில், 228க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் குடிநீர், சுகாதாரம், தெருவிளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவதில் ஊராட்சி செயலர்கள் முக்கிய பங்கு வகுக்கின்றனர். இதுதவிர, ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதிலும் ஊராட்சி செயலர் பங்கு உள்ளது. இதற்காக ஒவ்வொரு ஊராட்சிக்கு ஒரு செயலர் வீதம் மாவட்ட நிர்வாகம் நியமனம் செய்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கிறது. இந்நிலையில், ஒன்றரை ஆண்டுக்கு மேலாக ஒன்றியத்தில் உள்ள 13 ஊராட்சி செயலர்கள் 27 ஊராட்சிகளையும் கூடுதலா கவனிப்பதால் சிரமப்படுகின்றனர். மேலும், ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை, தெரு விளக்குகள், குடிநீர் மின்மோட்டார்களை சீரமைப்பதில் தாமதம் ஆகிறது. இதனால் பல கிராமங்களில் குடிநீர் பிரச்சனை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை