மேலும் செய்திகள்
நாய்களால் ரயில் பயணியர் அச்சம்
4 minutes ago
தர்மசாஸ்தா கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
5 minutes ago
கால்நடை கிளை நிலையம் அமைக்க வலியுறுத்தல்
5 minutes ago
இன்று இனிதாக
6 minutes ago
திருவள்ளூர்: விஷ்ணுவாக்கம் கிராமத்தில் பராமரிப்பில்லாத சமுதாய கழிப்பறையில் செடிகள் வளர்ந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. திருவள்ளூர் - செங்குன்றம் சாலையோரம் விஷ்ணுவாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. திருவள்ளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இந்த ஊராட்சியில், 1,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்கள் வசதிக்காக, 2020 - 21ம் ஆண்டு ஊரக வளர்ச்சி துறை சார்பில், 5.20 லட்சம் ரூபாய் மதிப்பில், சமுதாய கழிப்பறை கட்டப்பட்டது. சிறிது காலம் பயன்பாட்டில் இருந்த கழிப்பறை, அதன்பின் பராமரிப்பின்றி உள்ளது. கழிப்பறையைச் சுற்றிலும் செடிகள் வளர்ந்துள்ளன. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் சென்று வரும் வகையில் கட்டப்பட்டுள்ள சாய்தள பாதையை பயன்படுத்த முடியாத அளவிற்கு செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், கழிப்பறையை கிராம மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், அரசு நிதி விரயமாகி வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம், பராமரிப்பில்லாத சமுதாய கழிப்பறையைச் சுற்றிலும் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
4 minutes ago
5 minutes ago
5 minutes ago
6 minutes ago